தமிழக எல்லையில் சசிகலா வைத்த ட்விஸ்ட்... ஏமாற்றத்தில் காவல்துறை..!

By Thiraviaraj RMFirst Published Feb 8, 2021, 10:50 AM IST
Highlights

பெங்களூருவில் இருந்து சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார். 
 

பெங்களூருவில் இருந்து சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார். 

சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார். பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மருத்துவா்களின் அறிவுரைப்படி, பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை வருகிறார்.

பெங்களூருவில் இருந்து அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் உள்ள அதிமுக கொடியை போலீஸார் அகற்றினர். இதனால் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணிக்கிறார். முன்னதாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜே ஆகும்போது சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையானது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக தரப்பில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கூறியிருந்தனர். சசிகலா கார் மாறி அதிமுக கொடியுடன் அதிமுக உறுப்பினர் சம்பங்கியின் காரில் ஏறி பயணித்தார். இதனால் சசிகலா மீது காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிற்று. 

சசிகலா காரில் அதிமுக கொடியை அகற்றவில்லை. அதற்காக கிருஷ்ணகிரி போலீஸார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

click me!