வாங்க ராஜமாதா... சசிகலாவை ட்ரெண்டாக்கி உற்சாக வரவேற்பு..!

Published : Feb 08, 2021, 10:27 AM IST
வாங்க ராஜமாதா... சசிகலாவை ட்ரெண்டாக்கி உற்சாக வரவேற்பு..!

சுருக்கம்

சசிகலா தமிழகம் வருவதையொட்டி சமூக வலைதளமான டிவிட்டரில், #Sasikala, #TNwelcomesசின்னம்மா, #WelcomeRajamadha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.   

சசிகலா தமிழகம் வருவதையொட்டி சமூக வலைதளமான டிவிட்டரில், #Sasikala, #TNwelcomesசின்னம்மா, #WelcomeRajamadha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தற்போது தமிழக எல்லைக்குள் நுழைந்தார்.
 
இதனை அடுத்து தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவரை தமிழக எல்லையில் வரவேற்க அவரது ஆதரவாளர்களும் அமமுக கட்சியினர்களூம் தயார் நிலையில் உள்ளனர். பெங்களூருவில் இருந்து வரும் சசிகலாவுக்கு சென்னையில் 7 இடங்களில் வரவேற்பு அளிக்கத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை வந்ததும் சசிகலா, எம்.ஜி.ஆர் இல்லமான ராமாவரம் தோட்டத்திற்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சாலை மார்க்கமாக வரும் சசிகலாவை வரவேற்க பலர் காத்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில், #Sasikala, #TNwelcomesசின்னம்மா, #WelcomeRajamadha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!