பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலாவின் காரில் மீண்டும் அதிமுக கொடி.. வரவேற்க தயாராகும் தொண்டர்கள்..!

By vinoth kumarFirst Published Feb 8, 2021, 8:29 AM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா புறப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா புறப்பட்டார்.

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆனார். ஆனால், எதிர்பாராத விதமாக அவருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

இதனையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா கடந்த மாதம் 31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்கள் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார். 

இந்நிலையில், அவர் இன்று சென்னை திரும்புகிறார். பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா தமிழகம் புறப்பட்டார். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன்  சசிகலா தமிழகம் புறப்பட்டார். பெங்களூருவின் தேவனஹள்ளியிலிருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். டிடிவி தினகரன், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் சசிகலாவை காரில் அழைத்து வருகின்றனர்.

click me!