234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சூளுரை.

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2021, 10:35 AM IST
Highlights

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு தொகுதி உடன்பாடு கண்டு தேர்தலை சந்திப்பது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தீர்மானித்துள்ளது. 

தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு போயுள்ளது. ஒட்டுமொத்த கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அரசு வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் கடன் வாங்கி தேர்தலுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அது மட்டுமின்றி  வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தீவிரம் காட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது அதில் அதில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்: 

மத்தியில் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வேளாண் திருத்தச் சட்டங்கள் உட்பட மக்கள் விரோதப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி வரலாறு காணாத, வீரம் செறிந்த போராட்டத்தினை விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் களப்பலியாகியுள்ளனர். இந்திய நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலிமிருந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். இப்போராட்டத்தை ஒடுக்க கொடூரமான அடக்குமுறைகளையும், அவதூறுகளையும் மத்திய பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதற்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

   
11 மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டும் புதிதாக ஒரு மாணவர் சேர்க்கை கூட தொடங்கவில்லை. நீட் தேர்வினால் தமிழக, கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவாக மாறியுள்ளது. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் - குற்றச்சாட்டுகள், வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் “அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம், ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம்” என்ற இலக்கோடு தமிழகத்தில் தேர்தல் களம் காணுவது எனவும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கக் கூடிய தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளன. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் - சீத்தாராம் யெச்சூரி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் -பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - பிருந்தா காரத் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். தொடர்ந்து  முன்னுரிமை தொகுதிகளில் கோரிக்கை மாநாடுகள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக மக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், குறிப்பாக, அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை பூர்த்தி செய்வது, பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக உள்ள அனைவருக்கும் காலமுறை  ஊதியம் தீர்மானிப்பது, 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவது, நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை நிறைவேற்றுவது, சுற்றுச் சூழல் பிரச்சனைகள், 8 வழிச்சாலை, மனைப்பட்டா, கோயில் மடம் நிலங்களில் குடியிருப்போர் பிரச்சனைகளை வலியுறுத்தி தொகுதி அளவிலான மாநாடுகள் நடத்தவும் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. 

நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை முறியடிக்க இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவது எனவும், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு தொகுதி உடன்பாடு கண்டு தேர்தலை சந்திப்பது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தீர்மானித்துள்ளது. 

இதனடிப்படையில் தமிழ்நாட்டில்; அ.   அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்பது. ஆ. 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முனைப்புடன் களப்பணியாற்றுவது. இ. தமிழகத்தில் அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலனை சட்டமன்றத்தில் வலுவாக எதிரொலிக்க, கட்சியின் பலத்திற்கேற்ப கூடுதலான இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற பணியாற்றுவது.மேற்கண்ட  குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்  

click me!