அப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா..?? கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2020, 4:20 PM IST
Highlights

அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கே.எஸ்.அழகிரி கூறியதற்கு கருத்து தெரிவித்த அவர், எங்கள் கூட்டணியை அழகிரி நிர்ணயிக்க முடியாது என்றார்.

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் அலுவலகம் திறப்பு விழா சென்னையில் உள்ள சூளையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர். 

கொரனோ இந்தியாவில் குறைந்து வரக்கூடிய சூழலில் பண்டிகை காலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றார். அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கே.எஸ்.அழகிரி கூறியதற்கு கருத்து தெரிவித்த அவர், எங்கள் கூட்டணியை அழகிரி நிர்ணயிக்க முடியாது என்றார். பிரதமர் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார். 

 

பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் உரையின் சாராம்சம்.தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு கொண்டு வருகிறது. ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்மூலம் விவசாயம் மற்றும் மீன் வளத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றார். இந்த கருத்து மீண்டும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!