இதுவரை 6 சதவீதம் அளவிற்கு கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளது.. சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2021, 1:07 PM IST
Highlights

தமிழகத்தில் மதுரை உட்பட சில மாவட்டங்களில்  டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் செயலி அடிப்படையிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தேசிய அளவிலேயே முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.தி.நகர் கடைகளில் முறையாக விதிமுறை பின்பற்றப்படுவதை பார்க்க முடிந்தது. 

ஐனவரி 16 ல் , 3126 பேர் வரை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முதல் நாள் பூஜ்ஜிய நாளாக கணக்கிடப்பட்டு 28 நாள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நோய் குறைந்துள்ளதால் தடுப்பூசி வேண்டாம்  என பலர் நினைத்ததை படிப்படியாக மாற்றியுள்ளோம். 15,886 பேர் நேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 2.27 லட்சம் முன்கள பணியாளர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 1.98 லட்சம் சுகாதார பணியாளர்கள்,  19 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களும்  , 9789 காவலர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 

2.02 லட்சம்  பேருக்குமேல் கோவிஷீல்டு , 4039 நபர்கள் கோவாக்சின் செலுத்தி கொண்டுள்ளனர். ஒரு நாளிதழில் 25 ஆயிரம் தடுப்பூசி வீணாகியுள்ளதாக செய்தி வந்துள்ளதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தடுப்பூசி செலுத்துவதை அல்ஜீப்ரா கணக்குபோல பார்க்க கூடாது . தற்போது வரை சராசரியாக 6 சதவீதம்  தடுப்பூசி மட்டுமே வீணாகியுள்ளது. 10 சதவீதம் வரை தடுப்பூசிகள் வீணாவது இயல்புதான். 10 பேருக்கு பயன்படுத்தக்கூடிய தடுப்பூசியை , 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்று பயன்படுத்தாமல் இருக்க முடியாது. 

தற்போது ஒரு நாளைக்கு 450-500 பேருக்கு மட்டுமே கொரோனா பதிப்பு உள்ளது. தென் , மத்திய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை உட்பட சில மாவட்டங்களில்  டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  கோவிட் செயலி அடிப்படையிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தேசிய அளவிலேயே முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 

தி.நகர் கடைகளில் முறையாக விதிமுறை பின்பற்றப்படுவதை பார்க்க முடிந்தது. கொரோனா வந்தாலும் காப்பாற்றி விடுவார்கள் என்ற சுணக்கம் மக்களிடம் இருக்கிறது, மூச்சு திணறல் பாதிப்பை பார்த்தால்தான் கொரோனாவின் தாக்கம் புரியும் என்றார். பிரேசில் நாட்டில் கொரோனா தற்போது அதிகரித்துள்ளது. என்ற அவர் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட 28 நாள் இடைவெளியில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தடுப்பு மருந்து நிறுவனங்கள் கூறியுள்ளன என்றார். 

ஒழுங்குமுறை ஆணைய அறிவுரையையே நாங்கள் பின்பற்ற முடியும். அதன்படி மத்திய அரசும் 28 நாள் இடைவெளியை சரியாக கடைபிடிக்க கூறுகின்றனர். 20 ம் தேதிக்கு மேல் பொதுமக்களில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தங்படும். நாளை ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  

 

click me!