பொதுமக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு.. 1100 டயல் செய்தால் போதும்.. எடப்பாடியார் வகுத்த சூப்பர் திட்டம்..

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2021, 12:49 PM IST
Highlights

பொதுமக்களால் தரப்படும் புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி, இந்நிலையில் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார்.  

பொதுமக்கள் தங்களது குறைகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்கவும், அதேபோல் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை அறிந்து உடனே அரசு அதிகாரிகள் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் 1100 என்ற தொலைபேசி சேவை திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். 

பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்ப்பதற்கு அரசு அலுவலகங்களில் மனு  கொடுப்பது வழக்கம். அதில் தீர்வு கிடைக்காவிட்டால், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து தீர்வு கண்டு வருகின்றனர். இல்லை என்றால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. 

பொதுமக்களால் தரப்படும் புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி, இந்நிலையில் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். அதாவது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது 1100 சேவை எண் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். அந்த வகையில் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்காக 1100 என்ற சேவை மையம் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 

இந்த சேவை மூலம் அனைத்து துறைகளும் முதலமைச்சரின் அலுவலக உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்க உள்ளதாகதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், எந்த ஒரு உதவி குறித்து தகவல் வந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர், அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும்,  முதலமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியரை இனி நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், 1100 எண்ணை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை கேட்டால் உடனடியாக அதற்கு பலன் கிடைக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!