இன்று முதல் பாஜகவில் எஸ்.எம்.கிருஷ்ணா….அமித்ஷா முன்னிலையில் இணைப்பு விழா…

 
Published : Mar 22, 2017, 07:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
இன்று முதல் பாஜகவில் எஸ்.எம்.கிருஷ்ணா….அமித்ஷா முன்னிலையில் இணைப்பு விழா…

சுருக்கம்

S.M.Krishna in bjp

இன்று முதல் பாஜகவில் எஸ்.எம்.கிருஷ்ணா….அமித்ஷா முன்னிலையில் இணைப்பு விழா…

கர்நாடக மாநில  முன்னாள் முதலமைச்சர்  எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகினார். இந்நிலையில் இன்று அவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக வில் இணைகிறார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கினார். கடந்த  1999  ஆம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி வகித்தார்.

இதனைத் தொடர்ந்து  2005 -  2009  வரை  மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பணியாற்றினார்.

2009-ம் ஆண்டில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் எஸ்.எம்.கிருஷ்ணா பதவி வகித்தார்.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் எஸ்.எம்.கிருஷ்ணா பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா விலகினார்.

காங்கிரஸ் கட்சி குழப்பமான நிலையில் இருப்பதாகவும், மூத்த தலைவர்களை யாரும் மதிப்பதில்லை என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா  பாஜக வில் இணைய உள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் ஆகியோரது முன்னிலையில் இன்று பாஜக வில் இணைகிறார்.

கடந்த 15-ம் தேதியே எஸ்.எம்.கிருஷ்ணா  பாஜக.வில் இணைய இருந்தர், ஆனால் அவரது சகோதரி திடீரென காலமானதால், அவர் இன்று இணைகிறார்..  

 

 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்