சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை… பஞ்சாயத்துப் பண்ணும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம்…

First Published Mar 22, 2017, 5:48 AM IST
Highlights
No power to sasikala


சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை… பஞ்சாயத்துப் பண்ணும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம்…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கக்கோரும் மனுவில் கையெழுத்திட சசிகலாவுக்கோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கோ தடை விதிக்க வேண்டும் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான பொதுநல மனுவை தாக்கல் செய்த அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்

அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா தற்போது  சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.  மேலும் அவர் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் அதிமுக. பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படிவத்திலும், வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கக்கோரும் படிவத்திலும் அவரோ, அவரால் நியமிக்கப்படும் நபரோ கையெழுத்திடுவது உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு முற்றிலும் முரணானது என்று தெரிவித்தார்.

சசிகலாவோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரோ அந்த படிவங்களில் கையெழுத்திட்டால் அந்த வேட்பாளர் மனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தங்களது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்யப்பட்ட ஒருவர் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் பொதுச்செயலாளராகவோ, தலைவராகவோ நீடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

 

 

click me!