
சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தமிழக சட்டமன்றத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஒ.பி.எஸ் அணி ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர்.
பொதுச்செயலாளர் ஆன போதே சசிகலா ஜெயலலிதாவை போன்று உடை அணிவதும், போட்டு அணிவதும், மோதிரம் அணிவதும், செருப்பு அணிவதும், ஜெயலலிதா காரில் செல்வதும் என ஓவர் சல்லையை நிகழ்த்தினார்.
இந்நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை அளித்தமையால், எடப்பாடி முதலமைச்சராக பதவியேற்றார்.
அதில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தும்படி திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சபாநாயகர் ஒருதலைபட்சமாக வாக்கெடுப்பு நடத்த எடப்பாடிக்கு உதவியதாக மு.க.ஸ்டாலின் கிழிந்த சட்டையோடு ஆளுநர் வித்யாசரிடம் நேரில் சென்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 23-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கு ஒ.பி.எஸ் அணி ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.