
இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிலாவுக்கா.! ஓபிஎஸ்க்கா!!…முடக்கப்படுமா.!!! தேர்தல் ஆணையம் இன்று முடிவு…எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து டெல்லியில் சசிகலா மற்றும், ஓபிஎஸ் தரப்பிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.
ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பினரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டதுசெல்லாது என்றும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதே போன்று சசிகலா தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆவணங்களை இணைத்து பதில் கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்பு வேட்பாளர் தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன் ஆகிய இருவரும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பு ஆதாரங்களையும் பரிசீலித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பினரும் தங்களது வழக்கறிஞர்களுடன், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அல்லது ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவார்கள்.
ஒருவேளை இரு தரப்புக்கும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காமல் அதை முடக்கிவிட்டால், அவர்கள் இருவரும் வெவ்வேறு சின்னங்களில்தான் போட்டியிட முடியும்.