தலித் மக்கள் பற்றி அவதூறு பேச்சு... ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு... திமுகவினர் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Mar 13, 2020, 12:29 PM IST
Highlights

சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பல சர்ச்சையான கருத்துகளைப் பேசினார். டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. திமுக காலத்தில்‌ ஹரிஜன நீதிபதிகள்‌ நியமிக்கப்பட்டார்கள்‌. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. ஹெச்.ராஜா பார்ப்பன நாய்க்கு எப்படி தைரியம் வந்தது. 

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பல சர்ச்சையான கருத்துகளைப் பேசினார். டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. திமுக காலத்தில்‌ ஹரிஜன நீதிபதிகள்‌ நியமிக்கப்பட்டார்கள்‌. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. ஹெச்.ராஜா பார்ப்பன நாய்க்கு எப்படி தைரியம் வந்தது. 

இதையும் படிங்க;-  ஆணவக் கொழுப்பில் வாய் கூசாமல் பேசிய ஆர்.எஸ்.பாரதி... கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..!

மேலும், ஹரிஜன நீதிபதிகளை நியமனம்‌ செய்தது திமுக தான்‌. உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. திமுக தான்‌ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது. என சர்ச்சைக்குரிய இழிவான வகையில்‌ பேசியுள்ளார்.‌ சட்டப்படி தடை செய்யப்பட்ட ஹரிஜன்‌ என்ற வார்த்தையை ஆர்‌.எஸ்‌. பாரதி திரும்ப திரும்ப தாழ்த்தப்பட்ட, தலித் மக்களை அவமதிக்கும்‌ வகையில்‌ பேசியுள்ளார் என முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இதையும் படிங்க;-  சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்ள குற்றம்சாட்டாதீர்கள்... பொன்னாருக்கு திமுக கடும் எச்சரிக்கை..!

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஆதிதமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண சுந்தரம் கொடுத்த புகாரில் தாழ்த்தப்பட்ட மக்கள் ,பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் திமுக எம்.பி. மற்றும் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாராதி பேசியுள்ளார் என்று கூறி அதற்கான வீடியோ பதிவோடு புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!