ரஜினியின் பேட்டி காமெடியாக உள்ளது, ரஜினி ரசிகர்களே அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விசிக எம்பி பொளேர்

By Thiraviaraj RMFirst Published Mar 13, 2020, 8:29 AM IST
Highlights

ரஜினியின் படங்கள் சமீப காலமாக சரியாக சினிமா தியேட்டர்களில் ஓடவில்லை.  இளைஞர்களை வைத்து படங்களைத் தயாரித்து தனது திட்டத்தை செயல்படுத்திப் பார்த்திருக்கலாம் ரஜினி.இதில் .அதையுமே செய்யாமல் நேரடியாக அரசியலில் அதைச் செயல்படுத்துவேன்,இதைச் செய்வேன் என்று ரஜினி சொல்லியிருப்பது காமெடியாக இருக்கிறது என்கிறார் விசிக எம்பி ரவிக்குமார்.

 T.Balamurukan

ரஜினியின் படங்கள் சமீப காலமாக சரியாக சினிமா தியேட்டர்களில் ஓடவில்லை.  இளைஞர்களை வைத்து படங்களைத் தயாரித்து தனது திட்டத்தை செயல்படுத்திப் பார்த்திருக்கலாம் ரஜினி.இதில் .அதையுமே செய்யாமல் நேரடியாக அரசியலில் அதைச் செயல்படுத்துவேன்,இதைச் செய்வேன் என்று ரஜினி சொல்லியிருப்பது காமெடியாக இருக்கிறது என்கிறார் விசிக எம்பி ரவிக்குமார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்து, தனது அரசியல் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசினார்.
 
அரசியலுக்கான முதல் மூன்று திட்டங்களை அறிவித்தார் ரஜினி. அதன்படி, முதலாவதாக, தேவையான அளவுக்கு மட்டுமே கட்சி நிர்வாகிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் . இரண்டாவதாக, இளைஞர்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். மூன்றாவதாக, கட்சிக்குத் தனி தலைமை, ஆட்சிக்குத் தனி தலைமை என்றார். 

 மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பற்றி பேசிய ரஜினி, “இப்போது நீங்கள் நினைக்கலாம். இதை ஏன் இப்போது சொல்கிறார் என்று நினைக்கலாம். கட்சித் தொடங்கும்போது சொல்லலாமே என்று கூட நினைக்கலாம். மனதிலிருந்து வரும் திட்டம் இது. உண்மைக்கான திட்டம் இது.நாம் எதிர்ப்பது இரண்டு பெரிய ஜாம்பவான்களை… 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக. கலைஞர் இல்லாத நிலையில் ஸ்டாலின் ஆட்சியை பிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.. பெரிய ஆளுமை இல்லாத ஒரு நிலை. பண பலம், ஆள் பலம். அவர்களை எதிர்க்க வேண்டும்.இன்னொரு பக்கம்,அதிமுக, ஆட்சியை கையில் வைத்திருக்கிறார்கள். குபேரனுடைய சொத்து கையில் இருக்கிறது.

இந்நிலையில், என்னை நம்பி வருபவர்களை என்னால் ஏமாற்ற முடியாது. முன்னரே அரசியலுக்கு வருவது பற்றி அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். இப்போது நான் அரசியலிலிருந்து விலகிவிட்டால்… என்னைக் கோழை என்று சொல்வார்கள். பயந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள். அதனால்தான் இதை முதலில் மக்களிடம் சொல்ல நினைத்தேன்" எனத் தெரிவித்தார். 


ரஜினியின் பேட்டி பரபரப்பாக இருக்கும் என்று எல்லோரையும் பதறவிட்ட ரஜினியின் பேட்டி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் எம்பி பேசும் போது.., “ரஜினி, அரசியலின் அடிப்படையைப் புரிந்து கொண்டுதான் இப்படி பேசியுள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவரது ரசிகர்களே ரஜினி சொன்னதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் ரஜினி, அவரது ரசிகர்களை அவமானப்படுத்தியுள்ள வகையில்தான் பேசியிருக்கிறார். 

இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ரஜினி, தான் சார்ந்துள்ள சினிமா துறையில் ஏன் அதைச் செயல்படுத்திப் பார்க்கவில்லை. உண்மையில் அவரது படங்கள் சமீப ஆண்டுகளாக சரியாக போகவில்லை. அப்படியென்றால், இளைஞர்களை வைத்து படங்களைத் தயாரித்து தனது திட்டத்தை செயல்படுத்திப் பார்த்திருக்கலாமே.அதைடு விடுத்து விட்டு நேரடியாக அரசியலில் அதைச் செயல்படுத்துவேன் என்கிறார். வெளிப்படையாக சொல்வதென்றால் ரஜினியின் அறிவிப்பு மிகக் காமெடியாக உள்ளது,” என்று கருத்து தெரிவித்துள்ளார். 


 

click me!