டெல்லி கலவரத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் விநியோகம்..!! அமித்ஷா திடுக்கிடும் தகவல்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 13, 2020, 7:44 AM IST
Highlights

டெல்லி கலவரத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து பண உதவி செய்யப்பட்டுள்ளது.அதைச் செய்த அமைப்பின் பெயரை நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிப்ரவரி 24-ம்தேதி கலவரத்தை  செய்வதற்கான பணம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு டெல்லியில் விநியோகிக்கப்பட்டது, என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    T.Balamurukan
   டெல்லி கலவரத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து பண உதவி செய்யப்பட்டுள்ளது.அதைச் செய்த அமைப்பின் பெயரை நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிப்ரவரி 24-ம்தேதி கலவரத்தை  செய்வதற்கான பணம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு டெல்லியில் விநியோகிக்கப்பட்டது, என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

டெல்லி வன்முறை குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குற்றவாளிகள் நரகத்தின் அடியில் இருந்தாலும் விட மாட்டோம் என்று கூறினார். 
டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் அவர் பேசிய போது..,"
கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 40-க்கும் அதிகமான படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் நரகத்தின் அடியில் மறைந்துகொண்டாலும் நாங்கள் அவர்களை பிடித்து வருவோம்.வன்முறை ஏற்படுத்துவதற்காக மதத்தையும், கட்சியையும் தரக்குறைவாக பேசுவோருக்கு தண்டனை வாங்கி தருவோம். அறிவியல்பூர்வ முறையில் நாங்கள் விசாரணை நடத்துவோம். இந்த விவகாரம் எங்களுக்கு முக்கியமான விஷயம். 

டெல்லி கலவரத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து பண உதவி செய்யப்பட்டுள்ளது.அதைச் செய்த அமைப்பின் பெயரை நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிப்ரவரி 24-ம்தேதி கலவரத்தை  செய்வதற்கான பணம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு டெல்லியில் விநியோகிக்கப்பட்டது. 
இதுபற்றி விசாரிக்க டெல்லி துணை நிலை கவர்னர் நீதிபதியை நியமிக்க வேண்டும். மோடி அரசு எல்லா விசாரணைகளையும் விரைந்து செய்கிறது என்பதை மக்கள் நம்ப வேண்டும். 

என்னைப் பற்றியோ, எனது கொள்கைகளைப் பற்றியோ யாரும் இங்கே குறை சொல்ல முடியாது. 76 சதவீத கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் நடந்திருக்கின்றது. 1967, 1969, 1970, 1979, 1980, 1983, 1985 ஆகிய ஆண்டுகளில் கலவரம் நடந்தபோதெல்லாம் நாங்கள் ஆட்சியில் இல்லை. 1989-ல் டெல்லி, 1990-ல் ஐதராபாத், 1990-ல் அலிகர், 1992-ல் கான்பூர், 1992-ல் போபால், 1993-ல் மும்பை ஆகிய சம்பவங்கள் நடந்த நேரத்தில் நாங்கள் ஆட்சியில் இல்லை. 

காங்கிரஸ் ஆட்சியில்தான் கலவரங்கள் ஏற்பட்டது. அந்த நேரத்தில் 76 சதவீத உயிரிழப்புகள் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது.இவ்வாறு அமித் ஷா கூறினார். 
 

click me!