பாஜகவை கிழி கிழின்னு கிழித்த சிவசேனா..!! அமித்ஷாவை காணவில்லை என சாம்னாவில் கட்டுரை..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 29, 2020, 2:04 PM IST
Highlights

ஆனாலும் சோனியா அமித்ஷாவை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் .  டெல்லியில் இவ்வளவு பெரிய வன்முறை நடந்தும் இது குறித்து மத்திய அரசு வாய் திறக்கவில்லை .

டெல்லி வன்முறையின்போது அமித்ஷா காணாமல் போய்விட்டதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான  சாம்னாவில் தலையங்கம் வெளியாகவுள்ளது . இதில் பாஜகவை சிவசேனா நேரடி விமர்சித்திருப்பது அரசியில் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக மற்றும் சிவசேனாவிடையே பனிப்போர் இருந்து வருகிறது .  இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.   இந்த கட்டுரையில் விவரம் : -  

டெல்லி சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரச்சாரத்திற்கு நீண்ட நேரம் ஒதுக்கினார் .  அப்போது வீடு வீடாகச் சென்று பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார் .  ஆனால் டெல்லியில் நடந்த வன்முறையில் பல உயிர்கள் பறிபோனது பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தபோது,  தனியார் சொத்துக்கள் நாசப்படுத்தப் பட்டபோது அமித்ஷா எங்கே போனார்.  அமித்ஷாவை  டெல்லியில் காணமுடியவில்லை.

இந்நிலையில் ,   காங்கிரஸ் கட்சியை வேறு எந்த  கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்து எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா இருந்திருந்தால் ,  உள்துறை அமைச்சர் பதவி விலகுவது  குறித்து  பாரதிய ஜனதா தனது கோரிக்கையை அழுத்தமாக  கொடுப்பதற்காக  பெரிய அளவில் கண்டனப் பேரணி நடந்திருக்கும்.  ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. 

ஏனெனில் பாஜக ஆட்சியில் இருக்கிறது ,  எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிறது .  ஆனாலும் சோனியா அமித்ஷாவை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் .  டெல்லியில் இவ்வளவு பெரிய வன்முறை நடந்தும் இது குறித்து மத்திய அரசு வாய் திறக்கவில்லை . அகமதாபாத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிராம்பை  வரவேற்க அமைச்சா் அமித்ஷா சென்றிருந்த நேரத்தில்தான் டெல்லியில் உளவுத்துறை அதிகாரி வன்முறையில் படுகொலை செய்யப்பட்டார் .  வன்முறை நடந்து மூன்று நாட்கள் கழித்து மோடியும் அமித்ஷாவும் மக்கள் நல்லிணக்கம் காக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பது என்ன நியாயம் என்று  அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  

 

click me!