ட்ரம்பு இந்தியா வந்தபோது ஏற்பட்ட செலவு...!! புள்ளி விவரத்துடன் கணக்கு சொன்ன முதலமைச்சர்..!!

Published : Feb 29, 2020, 01:11 PM IST
ட்ரம்பு இந்தியா வந்தபோது ஏற்பட்ட செலவு...!! புள்ளி விவரத்துடன் கணக்கு சொன்ன முதலமைச்சர்..!!

சுருக்கம்

இந்நிலையில் அவரின் வருகைக்காக செலவு எவ்வளவு என்பதை மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் .  ட்ரம்ப் வருகைக்காக சுமார் 100 கோடி செலவிடப்பட்டதாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது .   

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  வருகை ஏற்பட்டிற்காக ரூபாய் 8 கோடி தான் செலவானது என குஜராத் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார் . அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகை எந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டதோ அதே அளவிற்கு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் அவரின் வருகைக்காக செலவு எவ்வளவு என்பதை மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் .  ட்ரம்ப் வருகைக்காக சுமார் 100 கோடி செலவிடப்பட்டதாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது . 

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி,   ட்ரம்பின் வருகைக்காக எட்டு கோடி மட்டுமே செலவானது எனக் கூறியுள்ளார் .  அதிபர் ட்ரம்ப்  கடந்த 24 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார் ,  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடந்த நமஸ்தே  ட்ரம்ப் நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார் .   முன்னதாக சபர்மதி ஆசிரமம் சென்ற அவர் பின்னர் தாஜ்மஹாலை  நேரில் பார்வையிட்டார் .  இந்நிலையில்  அவரது வருகைக்காக நூறு கோடி  செலவானதாக குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

அதற்கு பதிலளித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் விஜய்  ரூபானி  ,  ட்ரம்ப்  வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூபாய் 100 கோடி செலவானதாகவும், வெறும் இரண்டு தினங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை அரசு விரையம் செய்துள்ளது எனவும் குற்றஞ்சாட்டியது . இந்நிலையில் இதற்கு பதில் அளித்த மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி,   காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது ,  மொத்தம் எட்டு கோடி மட்டுந்தான் செலவானது .  அதில் குஜராத் மாநில அரசு நான்கு கோடி செலவிட்டது ,  அதே அளவு தொகையை அகமதாபாத் மாநகராட்சி செலவிட்டது .  சாலை பழுது பார்க்கும் பணிக்கு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என  அவர் விளக்கமளித்துள்ளார். 

 

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!