முன்னாள் அமைச்சர் கைது !! காங்கிரஸ் வன்முறை வெறியாட்டம்… பேருந்துகள் உடைப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 4, 2019, 10:18 AM IST
Highlights

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர்  டி.கே.சிவக்குமார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து  கண்டித்து கர்நாடகாவில் இன்று மாந்லம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான பேருந்துகள்  கல்வீசி தாக்கப்பட்டன.

கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முன்னாள் முதலமைச்சர்  குமாரசாமியின் அமைச்சரவையில்  நீர்ப்பாசனத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2017, ஆகஸ்டில் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது வருமான வரி சோதனையின் போது டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக  வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அந்த  குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதற்கிடையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை தலைநகர் டெல்லியில் நேற்றிரவு  அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகம் முழுவதும்  காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. 

கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. காங்கிரஸ் தொண்டர்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.அவரது சொந்த தொகுதியான ராமநகரம் பகுதியில்  கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளன.

click me!