உங்ககிட்ட நாங்க கேட்டமா ? உங்க வேலைய மட்டும் பாருங்க ! மன்மோகன் சிங்கை அசிங்கப்படுத்திய பாஜக !!

By Selvanayagam PFirst Published Sep 4, 2019, 7:59 AM IST
Highlights

பழி வாங்குவதை கைவிட்டு விட்டு , பொருளாதாரத்தை மீட்டெடுங்கள் என மன்மோகன் சிங் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அரசு, பொருளாதாரத்தை எப்படி கையாள்வது என்று உங்களிடம் கேட்கவில்லை என கூறி அசிங்கப்படுத்தியுள்ளது.
 

இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்து உள்ளது. ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது.
இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு  முன்னர் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர், “நாட்டின் இன்றைய பொருளாதார நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சிவீதம் 5 சதவீதம்தான் என்பது, நாம் நீண்ட பொருளாதார மந்த நிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் ஆகும். இந்தியா அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி காண்பதற்கான வளத்தைப் பெற்ற நாடு. ஆனால், மோடி அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள தவறான நிர்வாகம்தான் இந்த மந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது” என கூறி இருந்தார்.

மேலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியில் இருந்து நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, அனைத்து விவேகமான குரல்களையும், சிந்தனைகளையும் உடைய நபர்களை அரசு நாட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
” 
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.


.
அப்போது அவரிடம், பொருளாதார மந்த நிலை தொடர்பாக மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துகள் குறித்து செய்திளார்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மன்மோகன் சிங்குக்கு பதிலடி கொடுக்கிற வகையில் பொருளாதாரத்தை எப்படி கையாளலாம் என மன்மோகன் சிங்கிடம் நாங்கள் கேட்கவில்லை, அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் என தெரிவித்தார்.

click me!