தெலங்கானாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.... ஆளுநராகும் தமிழிசைக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாய்ஸ்!

Published : Sep 04, 2019, 07:18 AM ISTUpdated : Sep 04, 2019, 07:19 AM IST
தெலங்கானாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.... ஆளுநராகும் தமிழிசைக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாய்ஸ்!

சுருக்கம்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கேள்விப்பட்டேன். இந்த எதிர்ப்புகளைப் பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை. எதிர்க்கட்சிகள் என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள்.   

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டிருப்பதால அந்த மாநில மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நம்புவதாக புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் செய்தியார்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசையைப் பற்றியும் கிரண்பேடி கருத்து தெரிவித்தார்.  “தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கேள்விப்பட்டேன். இந்த எதிர்ப்புகளைப் பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை. எதிர்க்கட்சிகள் என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள். 
மாநில ஆளுநர்களை இந்திய அரசுதான் நியமிக்கிறது. தமிழிசை நியமனத்தில் எந்தத் தவறும் இல்லை. இது ஓர் அரசியல் சாசன பதவி. தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சேவகராகவும் மருத்துவராகவும் பணியாற்றி செய்திருக்கிறார். அவர் தற்போது தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அந்த மாநில மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்று கிரண்பேடி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!