ரகசியமாக மேல் மருவத்தூர் சென்ற மு.க.ஸ்டாலின் ! எதற்கு தெரியுமா ?

Published : Sep 03, 2019, 11:02 PM IST
ரகசியமாக மேல் மருவத்தூர் சென்ற மு.க.ஸ்டாலின் !  எதற்கு தெரியுமா ?

சுருக்கம்

மேல் மருவத்தூர் ஆன்மீக தலைவர் பங்காரு அடிகளாரின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்ற திமுக தலைவர் அவர்களை வாழ்த்தினார். ஆனால் ஸ்டாலின் மேல் மருவத்தூர் சென்றதை திமுகவின் சமூக வலைதளங்களில் கூட வெளியிடவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனின் மகள் டாக்டர் அ.மதுமலர் - டாக்டர் க.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மேல்மருவத்தூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பங்கேற்றார்.  மண்டபத்திற்கு வந்த ஸ்டாலினை பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன் வரவேற்றார். பிறகு நேராக மேடைக்கு சென்ற ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன், பொன்முடி, த மோ அன்பரசன் உள்ளிட்ட பலத் பங்கேற்றனர். இந்த திருமண விழாவுக்கு ஸ்டாலின் வருவது ரகசியமாக வைக்கப்பட்டடிருந்ததாக கூறப்படுகிறது.  

மு.க.ஸ்டாலின்  இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு சென்ற பிறகும் கூட திமுகவின் ஐடி பிரிவு அது தொடர்பான தகவல்களை  வெளியிவில்லை. ஆனால் பங்காரு அடிகளால் தரப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!
வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி