சிவகங்கை, தூத்துக்குடியில் மீண்டும் மக்களவை தேர்தல்..? பதற வைக்கும் பாஜக

Published : Jul 09, 2019, 03:30 PM ISTUpdated : Jul 09, 2019, 04:18 PM IST
சிவகங்கை, தூத்துக்குடியில் மீண்டும் மக்களவை தேர்தல்..? பதற வைக்கும் பாஜக

சுருக்கம்

தமிழகத்தில் மத்திய சென்னை, சிவகங்கை, நிலகிரி, தூத்துக்குடி ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி.  

தமிழகத்தில் மத்திய சென்னை, சிவகங்கை, நிலகிரி, தூத்துக்குடி ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எச்.ராஜா, ‘’மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழலை கவனிக்க விரைவு நீதிமன்றங்கள் உள்ளது. தமிழகத்தில் மத்திய சென்னை, சிவகங்கை, நிலகிரி, தூத்துக்குடி ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி.

தமிழகத்தில் இந்தி திணிப்பு என கூறும் திமுகவினர், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர்கல்வி ஏன் இல்லை? மீண்டும் இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் விமர்சித்தால், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்’’ என்று அவர் தெரிவித்தார். 

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களம் கண்டார். தேர்தல் முடிவில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். இந்நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

அந்த மனுவில் கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், அதனைச் சுட்டிக்காட்டிய பின்னரும் கூட புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நிலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிவகங்கை தொகுதயில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் மீது 2ஜி வழக்கு, பி.எஸ்.என்.எல் வழக்கை தூசிதட்டி மீண்டும் விசாரிக்க உள்ளது. சிவகங்கை தொகுதி எம்.பியான கார்த்திக் சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனை மனதில் வைத்தே அந்தத் தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் வருவது உறுதி’’ என அவர் கூறியுள்ளார்.  


 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!