தடைகளை உடைத்து தப்பித்தார்... 23 ஆண்டுகளுக்கு பிறகு வைகோவுக்கு வாய்த்த அதிர்ஷ்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2019, 11:41 AM IST
Highlights

மாநிலங்களவை தேர்தலுக்கான மதிமுக பொதுச்செயலாளஎ வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

மாநிலங்களவை தேர்தலுக்கான மதிமுக பொதுச்செயலாளஎ வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றம் செல்ல இருக்கிறார்.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த தேசத் துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. வைகோ, திமுக ஆதரவுடன் ராஜ்யசபாவின் உறுப்பினராக மனு தாக்கல் செய்தார். வைகோவின் வேட்பு மனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். வைகோவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அந்த இடத்தை இளங்கோ நிரப்புவார் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் அவர் ராஜ்யசபா மூலம் எம்.பி.யாகி நாடாளுமன்றம் செல்வது உறுதியாகி இருக்கிறது.

click me!