
இலங்கையின் நிலை விரைவில் தமிழகத்திற்கும் வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதை அடுத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையின் நிலை விரைவில் தமிழகத்துக்கும் வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 58 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள் அவரது திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிடர் என்பதற்கு நான் எந்த ஒரு முக மூடியும் போட மாட்டேன். ஏனென்றால் நான் முதலில் தமிழர். நான் திராவிடன் என்று அண்ணாமலை கூறுவதற்கு ஸ்டாலின் மற்றும் கி.வீரமணியிடம் தான் கேக்க வேண்டும். ஆரியர்களே நாங்கள் திராவிடர்கள் என்று கூறினால் என்ன செய்வது? பெரியார் சமாதியில் சண்டையிட்டு கொள்வதா? எல்லாம் ஜாதியினரும் அட்சகர் ஆகலாம் என கூறுகிறார்கள். என்னை கோவிலில் இருந்து வெளியேற்றியது யார்? ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல முடியுமா?.
பாஜக தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். நாங்கள் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருக்க விருப்பவில்லை, எப்போதும் முதலாவது கட்சியகதான் இருக்க விரும்புகிறேன். இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் வருபவர்களை சிறைச் சாலையில் அடைக்காமல் அவர்களுக்கு ஒரு தனி முகாம் அமைத்து அதில் தங்க வையுங்கள். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி விரைவில் தமிழகத்துக்கு வரும். மின்சாரம் வாங்குவதற்கு மட்டுமே முதலீடு செய்கிறார்களே தவிர உற்பத்தி பண்ணுவதற்கு முதலீடு செய்ய மறுக்கிறார்கள் என்று சீமான் தெரிவித்தார்.