சொல்லி 24 மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு.. செந்தில் பாலாஜியை பங்கம் செய்யும் டிடிவி

Published : Apr 21, 2022, 01:49 PM IST
சொல்லி 24 மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு.. செந்தில் பாலாஜியை பங்கம் செய்யும் டிடிவி

சுருக்கம்

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

திடீர் மின்வெட்டு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. குறிப்பாக கடலூர், விருத்தாசலம் , விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட  பல மாவட்டங்களில் இதே நிலை நீடித்து வருகிறது.

குவியும் புகார்

பல இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் கடும் அவதி

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மத்திய அரசு மீது பழி

இதே நிலை தொடர்ந்தால் கோடைக்காலத்தை எப்படி நகர்த்துவது என்ற அச்சமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் தடைபட்டது என்று கூறி மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!