2016 ஆம் ஆண்டு ஆர். கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது எனக்கு கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என தெரிவித்த சிம்லா முத்து சோழன், கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக அரசியல் மாறிவிட்டது என கூறியுள்ளார்.
அதிமுகவில் இணைந்த சிம்லா
மறைந்த திமுக துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் அம்மையாரின் மருமகளும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
2002 முதல் திமுகவில் இருந்து வருகிறேன். திமுகவில் பல பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. 2016 ல் எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தனர் , அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்பு தரவில்லை , அடுத்த தேர்தலில் பொட்டிய வாய்ப்பு தருவதாக திமுக தலைவர் எனக்கு வாக்குறுதி தந்தார் , ஆனால் அதை இன்று வரை அவர் நிறைவேற்றவில்லை.
பணம் இருந்தால் மட்டுமே அங்கீகாரம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுதும் 6 நாள் இருசக்கர வாகன பேரணி ஏற்பாடு செய்தேன். ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. அதே இருசக்கர பேரணியை 4 மாதம் கழித்து இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மூலம் செய்தனர். திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் மட்டுமே விருப்பமின்றி பலர் பல்லை கடித்து கொண்டு திமுகவில் உள்ளனர்.
என்னால் இதற்கு மேல் இருக்க முடியாது. அதனால் அதிமுக வந்துவிட்டேன். கருணாநிதி இருந்தபோது திமுக அரசியல் வேறு மாதிரி இருந்தது, இப்போது வேறுமாதிரி இருக்கிறது. திமுகவில் Vitamin m இருந்தாதால் அங்கீகாரம் தருகின்றனர்.
இதையும் படியுங்கள்