தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் போட்டா போட்டிக்கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
வரும் மக்களவை தேர்தலில் வடமாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கட்சியான பாமக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை எழுந்துள்ளது.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பிப்ரவரி 1ம் தேதி நடந்த பாமக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் ராமதாசுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் போட்டா போட்டிக்கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாமக இருதரப்பிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதிக தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை பதவி ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி என பாமக உறுதியாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: AIADMK - PMK Alliance: அதிமுகவுடன் பாமக கூட்டணியா? உண்மையை போட்டுடைத்த அன்புமணி.!
இந்நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக - பாமக கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மக்களவை தொகுதியும் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தாகவும் விரையில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இதனை அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கூட்டணி குறித்து பாமக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார். மற்றொரு புறம் பாஜகவுடன் பாமக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பாமக சார்பில் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் கூட்டணி சேரலாம் என கூறியுள்ளது. ஆனால், பாஜக தரப்பில் முதலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளாமல் என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள்? இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை!
இதெல்லாம் ஒருபுறம் இருக்க திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கடந்த முறை தரப்பட்ட 2 தனித் தொகுதிகளுடன் இந்த முறை 1 பொதுத்தொகுதியும் வேண்டும் என்பதுடன் தங்கள் சின்னத்திலேயே போட்டி என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் உடன்பாடு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அப்படி ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் பட்சத்தில் பாமக திமுக கூட்டணியில் சேர்ந்து கொள்ளாமல் என்பதால் கூட்டணி விவகாரத்தில் பொறுமை காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.