நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுத்திப்படுத்தும் வகையில் இன்று கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தொகுதி பங்கீடு தீவிரம்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டியானது உருவாகியுள்ளது. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் அணியை வலுப்படுத்த மற்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
undefined
தற்போது வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் இணையும் மநீம
இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கிட்டை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் இந்த முறை திமுக கூட்டணியில் இணையுள்ளது. இதற்கான ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்று காலை மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வர உள்ளார்.
ஸ்டாலினை சந்திக்கும் கமல்
அப்போது மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தென் சென்னை மற்றும் கோவை தொகுதியை கேட்பதாக தெரிகிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியும் கோவையை குறிவைப்பதால் சிக்கல் உருவானது. இதனையடுத்து இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று அண்ணா அறிவாலயத்திற்கு கமல்ஹாசன் வருவதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய சந்திப்பின் பொழுது மக்கள் நீதி மையத்திற்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது அல்லது ஒரு மக்களவை ஒரு மாநிலங்களை தொகுதியையும் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்