மதிமுகவிற்கு ஒரு தொகுதி மட்டும் கொடுக்கப்படும், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பு உறுதியாக தெரிவித்துவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வது தொடர்பாக வைகோ இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தொகுதி பங்கீடு தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பொறுத்தவரை திமுக,அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டியானது நடைபெற இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக -பாஜக தனித்தனியே கூட்டணி அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் பாஜகவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ்,சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கூட்டணி கட்சிக்கு தொகுதி பங்கீடு
அதே நேரத்தில் பாமகவானது அதிமுக கூட்டணி இணைவதா.? அல்லது பாஜக கூட்டணி இணைவதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை கொண்டுள்ளது. இந்த கட்சியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முஸ்லிம் லீக், கொமதேக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதிமுகவைபொருத்தவரை இரண்டு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டுள்ளது. ஆனால் திமுக தரப்பு ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தரப்படும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உறுதியாக தெரிவித்துவிட்டது .
மதிமுக முடிவு என்ன.?
ஆனால் மதிமுகவோ நாங்கள் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளது இதன் காரணமாக திமுக, மதிமுக கூட்டணியில் இன்னும் உடன்பாடு ஏற்படாத நிலை உள்ளது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் கூட்டணியில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அடுத்த கட்டம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டமானது இன்று காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதியை பெற்றுக் கொண்டு திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது கூடுதல் மக்களவைத் தொகுதியை பெற்றுக் கொண்டு அதிமுக பக்கம் செல்லலாமா என்பது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்