அமெரிக்கா போய்விடுவேன் சிம்பு  மிரட்டல் பேட்டி

First Published Jan 11, 2017, 6:49 PM IST
Highlights


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக இன்று பேட்டி அளித்த நடிகர் சிம்பு பேட்டியில் ஆவேசம் , கோபம், மிரட்டல் ,உருட்டல் என பல சுவைகளாக இருந்ததுன் பேட்டி.

ஆரம்பத்தில் வளவளவென்று பேசிய சிம்புதெளிவாக பேசாததால் பல சானல்கள் நேரடி ஒளிபரப்பை நிறுத்தின.

 மாணவர்கள் போராட்டம் நடத்தியதை வரவேற்று உணர்ச்சி வசப்பட்டார். அதைப்பார்த்துதான் நானே இந்த பேட்டி அளிக்கிறேன் என்றார். பேட்டியில் எதையும் சிம்பு  போலீசாரை பாராட்டிய பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஏன் தடியடி நடடத்தினீர்கள் அன்றைக்கு லீவு போட்டிருக்கலாம் அல்லவா என்று ஆவேசப்பட்டார். 

தனது வீட்டு முன்னால் வாயில் கருப்புத்துணி கட்டி நிற்பேன் என்று கூறி ஆவேசப்பட்டவர் எல்லாம் வாங்கடா போங்கடான்னு பேட்டி கொடுத்தார். நான் என் வீட்டு முனால் நிற்கிறேன் அடிச்சு பாருடான்னு அடுத்து ஒரு சவாலை போலீசுக்கு விட்டார் . 

பின்னர் எல்லோருக்கும் பொதுவா சவால் விட்டார் நாளை உணர்வு இருந்தா வந்து நில்லு இல்லன்னா விடு எனக்கு ஒன்றும் இல்லை. நான் அமெரிக்க விசா வச்சிருக்கேன் பத்து வருஷ விசா அப்புறம் பறந்து போய்டுவேன் என்று மிரட்டினார்.

அப்புறம் தமிழ் அது இதுன்னு வரக்கூடாது , தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று யாரும் என்னிடம் வரக்கூடாது என்று மிரட்டினார். சினிமாக்காறங்க எதுக்கும் போராடலைன்னு அப்புறம் யாரும் கேட்க கூடாது என்று மிரட்டும் தொணியில் பேசினார். 

என்னங்க ஒரு போராட்டத்துக்கு ஜனங்க வரலைன்னா அமெரிக்கா போய்டுவேன்னு சொல்றீங்க ஓவரா இருக்கேன்னு செய்தியாளர்கள் கேட்டனர். 
அதற்கு பதிலளித்த சிம்பு அண்ணே இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கேள்வி கேட்காதீங்க என்றுய் முடித்து கொண்டார்.

click me!