சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி மறைவு... பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை!

By Thiraviaraj RM  |  First Published Jan 21, 2019, 2:20 PM IST

கர்நாடகத்டதில் உள்ள சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். 


கர்நாடகத்டதில் உள்ள சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். 

111 வயதான அவர் கடந்த ஒருமாதகாலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவரது இற்யுதிச் சடங்குகள் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.  பெங்களூவில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது துமக்கூரு.  இங்கு லிஙாயத்துக்களின் மடமான சித்த கங்கா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மூலம் மடாதிபதி சிவகுமாரசாமி பல கல்வி நிலையங்களையும், சமஸ்கிருத, வேத பாடசாலைகளையும் நடத்தி வந்தார். பாஜக முக்கியத்தலைவர்கள் அவ்வப்போது சிவகுமாரசாமியை சந்தித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

நடமாடும் கடவுள் எனவும் மகான் பசப்பாவின் மறு அவதாரம் எனவும் கர்நாடக மக்களால் போற்றப்படுபவர். கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. சிவகுமாரசாமி மறைவை அடுத்து கர்நாடகாவில் கல்லூரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தேசிய தலைவர்கள் வர இருப்பதால் பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

click me!