யாகம் நடத்தினால் மட்டும் ஸ்டாலின் முதல்வராக ஆகிவிடுவாரா? ஓபிஎஸ் காட்டமான பதில்

Published : Jan 21, 2019, 01:06 PM ISTUpdated : Jan 21, 2019, 01:09 PM IST
யாகம் நடத்தினால் மட்டும் ஸ்டாலின் முதல்வராக ஆகிவிடுவாரா? ஓபிஎஸ் காட்டமான பதில்

சுருக்கம்

தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, வழக்கம் போல் சாமி கும்பிட்டேன் என மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். 

தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, வழக்கம் போல் சாமி கும்பிட்டேன் என மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதல்வர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த ஓபிஎஸ் யாகம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் தலைமைச் செயலகத்தில் என்னுடைய அறையில் வழக்கம் போல சாமி கும்பிட்டேன் என்று விளக்கமளித்துள்ளார். யாகம் செய்தால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்எல்ஏக்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே? யாகம் நடத்தினால் பதவி கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையை நம்புகிறாரா ஸ்டாலின்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் என ஸ்டாலின் நினைக்கிறார். சமீப காலமாக ஸ்டாலின் குழப்பத்தில் உச்சியில் உள்ளார். மக்கள் முழுமையாக எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது தேர்தலின்போது தெரியும். எந்த தேர்தல் வந்தாலும், மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியை அளிப்பார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!