தெரு தெருவா சாராய கடைய திறந்துவிட்டு Ethics பற்றி பேசலாமா? திராவிட தொடைநடுங்கி.. ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்.!

By vinoth kumar  |  First Published Oct 29, 2022, 10:54 AM IST

தெரு தெருவா அரசே சாராய கடைய திறந்துவிட்டு ‘Ethics’ பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? என கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.


தெரு தெருவா அரசே சாராய கடைய திறந்துவிட்டு ‘Ethics’ பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? என கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில், தமிழகத்தில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை ஆகிய மூன்று நாட்களில், ரூ.708 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் ரூ.52.87 கோடிக்கும், சேலம் மாவட்டத்தில் ரூ.49.21 கோடிக்கும், சென்னையில் ரூ.48.80 கோடிக்கும், திருச்சியில் ரூ.47.78 கோடிக்கும், கோவையில் ரூ.45.42 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்தார். 

Latest Videos

இதையும் படிங்க;- தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.720 கோடிக்கு மது விற்பனையா? அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு..!

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில்;- தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு  தந்தி டிவி நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும்  வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் தந்தி டிவி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தந்தி டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பதிவு குறித்து ஷியாம் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தெரு தெருவா அரசே சாராய கடைய திறந்துவிட்டு ‘Ethics’ பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? அரசு சாராயம் விற்பது அசிங்கமில்லையாம், 3 நாட்களில் 700 கோடிக்கு விற்பனை என்று சொல்லுவது அவதூறாம்! உங்க ‘Legal Action’க்கு எல்லாம் பயப்பட்ட நாங்க திராவிட தொடைநடுங்கிகள் அல்ல.

தெரு தெருவா அரசே சாராய கடைய திறந்துவிட்டு ‘Ethics’ பற்றி எல்லாம் நீங்க பேசலாமா?
அரசு சாராயம் விற்பது அசிங்கமில்லையாம், 3 நாட்களில் 700 கோடிக்கு விற்பனை என்று சொல்லுவது அவதூறாம்!

உங்க ‘Legal Action’க்கு எல்லாம் பயப்பட்ட நாங்க திராவிட தொடைநடுங்கிகள் அல்ல. https://t.co/vXCPXyDCh8

— Shyam Krishnasamy (@DrShyamKK)

 

மற்ற மாநிலங்களில் சாராய கடைகள் உண்டு, ஆனால்… ஆளும் கட்சி அமைச்சர்களும் MPக்களும் சாராய ஆலையை நடத்துவது, அரசே TASMAC கடைகளை நடத்துவது, Bar-களை ஆளும் கட்சிகாரர்களுக்கே tender விடுவது  என மொத்த ஆட்சியையும் கட்சியையும் சாராயத்தை நம்பி நடத்தும் கேவலம் திராவிட மாடல் தமிழகத்தில் தான் என ஷியாம் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  தீபாவளிக்கு கோடிக்கணக்கில் மது விற்பதெல்லாம் ஒரு சாதனை இல்லை.. வேதனை..! ராமதாஸ் கடும் விளாசல்

click me!