திடீர் உடல்நலக்குறைவு... முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசுப்பொன் பயணம் ரத்து..!

By vinoth kumar  |  First Published Oct 29, 2022, 9:11 AM IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.


முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் நாளை பசுப்பொன் செல்ல இருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக நேற்று இரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு நேற்று இரவே வீடு திருப்பினார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்;- முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா.. இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லாத இபிஎஸ்..!

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் மதுரை சென்று  இரவு தங்கும் அவர் நாளை காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவிட்டு அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மரியாதை செலுத்துவதாக இருந்தது. அதன்பிறகு பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பசுப்பொன் செல்ல இருந்த நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- முதலமைச்சர் அவர்களுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, வரும் 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதி... என்னாச்சு அவருக்கு?

click me!