அழ விட்டாத்தான் இவனுங்க சண்டியத்தனம் கொஞ்சமாவது அடங்கும்... ஜெய் பீமுக்கு எதிராக கொதிக்கும் ஷ்யாம் கிருஷ்ணசாமி

By Thiraviaraj RM  |  First Published Nov 19, 2021, 12:15 PM IST

பெரிய கொம்பன் என்ற நினைப்பை எல்லாம் உடைத்து ஹீரோ முதல் தயாரிப்பாளர் வரை அழ விட்டாத்தான் இவனுங்க சண்டியத்தனம் கொஞ்சமாவது அடங்கும்


பெரிய கொம்பன் என்ற நினைப்பை எல்லாம் உடைத்து ஹீரோ முதல் தயாரிப்பாளர் வரை அழ விட்டாத்தான் இவனுங்க சண்டியத்தனம் கொஞ்சமாவது அடங்கும்’’ என புதிய தமிழகம் ஷ்யாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இருளர் இனத்திற்காக போராடிய தோழர் கோவிந்தனை ஒரு கம்யூனிஸ்ட்டாக பார்க்கும் போது, மூன்று கட்சிகள் மட்டும் அவரை ஒரு வன்னியராக சாதி அடையாளம் பூசியது. அந்த மூன்று கட்சிகள் பாமக, பாஜக, நாதக என விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’கோவிந்தனை வன்னியரா பார்க்க கூடாது, கம்யூனிஸ்டா தான் பார்க்கனுமாம். அப்போ படத்தில் போலிஸை கொடூர வில்லனா மட்டும் காட்டியிருக்கலாம், ஏன் சாதி அடையாளம் வந்தது?

Latest Videos

எல்லா சாதியிலும் திருடன் இருக்கான்னு நடிகன் சொல்லுப்போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கான்னு தான எதிர்வினையா இருக்கும்?! நிஜ நிகழ்வுகளை திரையில் காட்டும்போது, சமூக பிரிவினைகளை விரிவுப்படுத்தாமல் எடுப்பது படைப்பாளிகளின் பொறுப்பு.

சாதிகளுக்கிடையே பிணக்குகளை உண்டாக்கி சமூகங்களிடையே நல்லிணக்கத்தை கெடுத்து, வரட்டுத்தனமாக சமூக நீதி என்று மட்டும் பேசுவது அம்பேத்கரை அரைகுறையாக படித்ததின் விளைவு!. அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் கதையில் எதற்கு உண்மைக்கு புறம்பாக வன்னியர்களை கலங்கப்படுத்தனும் என சினிமா காரனிடம் அந்த சாதியை சார்ந்தவர்களின் நியாயமான கேள்வியை,

அப்படியே பழங்குடியினருக்கு எதிரானதாக திரித்து தனக்கான ஆதரவை திரட்டும் யுக்தியாக மாற்றுகிறான் சினிமாகாரன்! சினிமாகாரர்கள் தங்களுக்கு ஏகோபித்த ஆதரவு போல் marketing செய்வதில் வல்லுவர்கள். கொம்பன் படத்தை எதிர்த்தபோது இப்படிதான், நடிகர்/தயாரிப்பாளர் சங்கங்களும் வரிந்துகட்டி வந்தது, இறுதியில் நாங்கள் சொன்ன 72 இடங்களில் வசனங்களை மாற்றியும், ஒரு முழு பாடல் நீக்கப்பட்டே திரையில் வெளியானது!

இவனுங்களுக்கு நியாயமான கேள்விகளை பக்குவமாக கேட்டால் திமிரா தான் பதில் சொல்லுவானுங்க. பெரிய கொம்பன் என்ற நினைப்பை எல்லாம் உடைத்து ஹீரோ முதல் தயாரிப்பாளர் வரை அழ விட்டாத்தான் இவனுங்க சண்டியத்தனம் கொஞ்சமாவது அடங்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!