Jai Bhim: இதே பொழப்பா போச்சு.. போதும் இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. சூர்யாவை எச்சரிக்கும் தேவநாதன் யாதவ்.!

By vinoth kumarFirst Published Nov 19, 2021, 12:07 PM IST
Highlights

முற்போக்கு என்ற பெயரிலும், படைப்பு சுதந்திரம் என்ற பெயரிலும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தையும், காட்சிப்படுத்தலையும், திரைப்படத் துறையினரும், திராவிட சித்தாந்தவாதிகளும் தொடர்ந்து செய்து, அன்னிய நாட்டு கைக்கூலிகளிடம் விலை போகின்றனர். 

படைப்பு சுதந்திரம் என்ற பெயரிலும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தையும், காட்சிப்படுத்தலையும், திரைப்படத் துறையினரும், திராவிட சித்தாந்தவாதிகளும் தொடர்ந்து செய்து, அன்னிய நாட்டு கைக்கூலிகளிடம் விலை போகின்றனர் என தேவநாதன் யாதவ் கூறியுள்ளார்.

ஜெய்பீம் படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்துவிட்டது. கடலூரில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து சர்ச்சைகள் உருவாகிவிட்டன. படத்தில் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றத்தை நிகழ்த்தும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருக்கும் அக்னி கலச காலாண்டரும் சர்ச்சைக்கு வித்திவிட்டுவிட்டது. அக்னி கலச காலாண்டர் காட்சி நீக்கப்பட்டபோதும், பாமக லேசில் விடவில்லை. 

சூர்யாவும் ஜோதிகாவும் மன்னிப்புக் கோர வேண்டும். நஷ்ட ஈடு 5 கோடி வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கமும் சூர்யாவுக்கு நெருக்கடிக் கொடுத்தது. இந்த விஷயத்தில் இடதுசாரி, தலித், திராவிட கருத்தியல் பேசுவோர் சூர்யா பக்கம் நிற்கின்றனர். என்றாலும் பாமகவும் வன்னியர் சங்கமும் இதர வன்னியர் அமைப்புகளும் உக்கிரத்தைக் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதுதொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உண்மைக்கதை என்ற அடிப்படையில் வெளியான, 'ஜெய்பீம்' திரைப்படம், பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை பெற்றது. நல்ல படைப்பையோ அல்லது படைப்பாளியையோ, நாம் எப்போதும் எதிர்ப்பதில்லை. வரலாற்றை திரைப்படமாக்கும் போது, உள்ளது உள்ளபடி எடுக்க வேண்டும். அதில் பெயர் மாற்றம், காட்சி மாற்றம், கதை மாற்றம் என்று எதையும் செய்யக்கூடாது.

அதற்கு அப்பாற்பட்டு, ஜெய்பீம் திரைப்படத்தில், அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி, பின் அதை குருவாக காட்சிப்படுத்தி உள்ளனர். வன்னியர் சமுதாயத்தின் அக்னி கலச படம் பொறித்த காலண்டரை வைத்து, இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்கை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இதற்கு கண்டன குரல் எழுந்ததும், அந்த சமுதாய காலண்டரை மாற்றி, மகாலட்சுமி படம் பொறித்த காலண்டரை வைத்து, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி உள்ளனர்.

முற்போக்கு என்ற பெயரிலும், படைப்பு சுதந்திரம் என்ற பெயரிலும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தையும், காட்சிப்படுத்தலையும், திரைப்படத் துறையினரும், திராவிட சித்தாந்தவாதிகளும் தொடர்ந்து செய்து, அன்னிய நாட்டு கைக்கூலிகளிடம் விலை போகின்றனர். படைப்பு சுதந்திரம் என்ற பெயரில், அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாகவும், ஹிந்து மத கடவுளையும் தவறாக சித்தரிப்பது கண்டனத்திற்கு உரியது. 'ஜெய்பீம்' படத்திற்கு ஆதரவாக அறிக்கை விடுகிறோம் என்ற போர்வையில், திரைப்படத் துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களுக்கு எதிராக, எப்போதும் செயல்படும் போக்கை, நடிகர் சூர்யா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

click me!