ஜெய்பீம் படத்தினால் சூர்யா சம்பாதித்தது 70 கோடி... கொடுத்ததோ 10 லட்சம்... - அர்ஜுன் சம்பத் காட்டம்

manimegalai a   | Asianet News
Published : Nov 19, 2021, 12:01 PM IST
ஜெய்பீம் படத்தினால் சூர்யா சம்பாதித்தது 70 கோடி... கொடுத்ததோ 10 லட்சம்...  - அர்ஜுன் சம்பத் காட்டம்

சுருக்கம்

  ஜெய் பீம் படம் மூலம் 70 கோடி ரூபாயை சம்பாதித்த சூர்யா, ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.  

 

நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும், அதனால் நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ட்விட்டரில் அறிவித்து இருந்தார்.இந்த பதிவு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஆகிய பக்கங்களில் சர்ச்சைக்குரிய அந்த பதிவு  வெளியிடப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக கோவை காவல்துறையினர் அர்ஜுன் சம்பத் மீது  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அர்ஜுன் சம்பத், ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விமர்சித்ததற்கு எதிர்வினையாக அத்தகைய பதிவு தங்களது கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதுபோன்ற வழக்குகளை சந்திப்பதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நடிகர் விஜய் சேதுபதி போன்றோர் மத்திய அரசு வழங்கும் விருதுகளை பெற்றுக்கொண்டு இந்தியா குறித்தும், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் தவறாக பேசி வருகிறார்கள்.இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஜெய் பீம் படம் மூலம் 70 கோடி ரூபாயை சம்பாதித்த சூர்யா, ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு தன் படத்திற்கு விளம்பரம் தேடுகிறார். திரையில் மட்டுமே மனித உரிமைகள் குறித்து பேசுகிறார் நடிகர் சூர்யா.  அமேசான் ப்ரைம் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு அவர்களது ‘ஜெய்பீம்’ படத்தை விற்றுவிட்டு, தொழிலாளர் நலன், மனித உரிமைகள் குறித்து பேசுவது அவரது இரட்டை வேடத்தையே காட்டுகிறது’ என்று சூர்யாவை கடுமையாக விமர்சித்தார் அர்ஜுன் சம்பத்.


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு