ஆளுநர் எதுமே சொல்லக்கூடாதா? சொன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? தமிழிசை காட்டம்!!

By Narendran S  |  First Published May 9, 2023, 5:10 PM IST

ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறித்து விரும்பவில்லை என்று தமிழிசை காட்டமாக பதிலளித்தார். 


ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறித்து விரும்பவில்லை என்று தமிழிசை காட்டமாக பதிலளித்தார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏழைகளைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்க ஜிப்மர் முடிவு எடுத்தவுடன், அது அதிகமாக இருப்பதால் குறைக்கக்கூறி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினேன். அது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு நிதி ஜிப்மருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எம்பிக்கள், இயக்குநரை நேரடியாக சந்தித்து கேட்கலாம். நான் மருத்துவமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன். மக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதுதான் எனது கருத்து. ஆளுநர் கருத்தே சொல்லக்கூடாதா? அதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... என்ன காரணம் தெரியுமா?

Latest Videos

undefined

அதைபற்றி எனக்கு கவலையில்லை. மக்களிடம் உண்டியல் குலுக்கி சிறப்பு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்புவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். அதுவும் மக்களிடத்தில் இருந்துதான் பெறவேண்டுமா? நீங்கள் சேர்த்து வைத்ததில் வாங்கினாலும், அதில் நான் ஏற மாட்டேன். நான் பொதுமக்களுடன்தான் விமானத்தில் பயணிக்கிறேன். சிறப்பு விமானம் பயன்படுத்துவதில்லை. என்னை அனுப்பவது குறித்து நாராயணசாமி கவலைப்படவேண்டாம். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யப்படாமலும் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ரகம் நான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். நான் பணியை செய்கிறேன். கொரோனா நேரத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவமனைக்கு சென்று வரவில்லை. நான் சென்று வந்தேன். போராட்டம் நடத்தாமல் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம். தமிழகத்தில் இருப்போருக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கவில்லை.  

இதையும் படிங்க: ’திமுக ஆட்சியில் கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தல் அதிகரிப்பு’ - வேலுமணி குற்றச்சாட்டு

ஜிப்மர் மருந்துகள் தட்டுப்பாடு இருந்ததால் உடன் வாங்க ஏற்பாடு நடக்கிறது. ஜிப்மரில் மக்கள் மருந்துகம் அமைக்க டெண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு வக்காலத்து வாங்கவில்லை. சிடி ஸ்கேனுக்கு 90ம் ஆண்டில் இருந்து பணம் வாங்குகிறார்கள். பொதுமக்கள் மீது அதிக அக்கறை எங்களுக்கு உள்ளது. விசாகா கமிட்டி அரசு அலுவலகங்களில் அமைப்பதை பரிசீலிப்போம். மருத்துவம், பள்ளி, பொதுமக்கள் சேவை எந்த விதத்திலும் மக்கள் பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுகிறோம். முதல்வர் கோரிக்கைகளை வைத்தாலும், கையெழுத்து போடுவதில்லை என்று கூறுவது தவறு. அறிவிப்புகள் வருவதை நீங்கள் பார்க்கலாம். எல்லாமல் சரியாக நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

click me!