நவம்பர் 1-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா..? குஷியான தகவலை சொன்ன அன்பில் மகேஷ்.!

By Asianet TamilFirst Published Oct 24, 2021, 7:52 PM IST
Highlights

மாணவர்கள் தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

திருச்சியில் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என்று பல தரப்பினர் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். பள்ளிக்குக் கட்டாயமாக வர வேண்டும் என்று அரசு கூறவில்லை. 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கும் இதையேதான் கூறியுள்ளோம். ஒழுங்குக்கு மாணவர்கள் பழக வேண்டும் என்பதற்காகவே நவம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம்.


நீட் தேர்விலிருந்து விலக்குக்கு ஆதரவு கோரி 12 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களை திமுக எம்பி-க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். முதல்வர்களிடம் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த ஆய்வறிக்கையை அளித்து, நீட் தேர்வு விவகாரத்தில் நம்முடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர். அவர்களிடமிருந்து விரைவில் பதில் வரும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், இப்போதும் முதல்வராக இருக்கும்போதும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு விவகாரத்தில் மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில், நம் முதல்வரின் குரலுக்கு கண்டிப்பாக வலு சேர்க்கும்.” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

click me!