கூட்டணினா என்னன்னு திமுகவை பார்த்து கத்துக்கங்க.. அதிமுகவை டார்டாராக கிழித்த பாஜக ராம சீனிவாசன்.

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2022, 6:01 PM IST
Highlights

அதேபோல அதிமுக பாஜக கூட்டணி என்பது  வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டுமில்லாமல், கொள்கை கூட்டணியாக இருக்க வேண்டும். எனவே அதிமுக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். 

அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப பாஜகவுடன் கொள்கை ரீதியான  கூட்டணியை தீர்வு என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர்  ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணியாக இல்லாமல் திமுக தரப்பில் உள்ளதைப்போல கொள்கை கூட்டணியே உடனடி  தேவை என்றும், அதற்கு அதிமுக தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணிக் கட்சிகளை அதிமுக ஒவ்வொன்றாக தொலைத்ததுதான் இந்த தோல்விக்கு காரணம் என்றும், இப்போது கூட கைமீறி விடவில்லை பாஜக அதிமுக கூட்டாக சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. ஆனால் அதிலும் அதிமுக தோல்வியை சந்தித்ததால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி  அடைந்தோம் என அதிமுகவினர் கூறி வந்தனர். குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கேபி முனுசாமி போன்றோர் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினரின் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்றும் பாஜகவை தாக்கி வந்தனர். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது ஏன்? இத்தனை சறுக்கல் ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மொத்தம் தேர்தல் நடந்த 1369 வார்டுகளில் திமுக 952 வார்டுகளிலும் அதிமுக 164 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது திமுக வென்றதில்லை, 50 சதவீத வெற்றியை கூட அதிமுக எட்டவில்லை, அதேபோல் 3 ஆயிரத்து 824 நகராட்சி வார்டுகளில்  2360 இடங்களில் அதிமுகவும் ஆனால் அதிமுக பெரும் 638 இடங்களில் மட்டுமே வென்றது. மொத்தம் 7 ஆயிரத்து 407 பேரூராட்சி வார்டுகளில் திமுக 4388 வார்டுகளிலும் அதிமுக வெறும் 1206 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே போல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வார்டுகளிலும் திமுகவே வென்றுள்ளது. கொங்கு மண்டலத்தின் தளபதியாக கருதப்படும் எஸ்.பி வேலுமணியில் வார்டில் கூட அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் தோல்விக்காண காரணம் குறித்தும் எதிர்வரும் தேர்தலில் அக்கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சினிவாசன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இனி கூட்டணி இல்லாமல் களம் காண முடியாது என்ற எதார்த்தத்தை அதிமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  கற்பித்திருக்கிறது உண்மையிலேயே அதிமுக பாஜகவின் ஒரு மதிப்புமிக்க கூட்டணிதான், அதில் எந்த சந்தேகமும் இல்லை, திமுக போன்று ஒரு வலிமையான பொது எதிரியை சந்திக்க வேண்டிய தமிழ்நாட்டில் அதிமுக போன்று ஒரு கட்சி தொடர்ந்து பாஜகவுடன் நிற்க்கவேண்டும். பாஜக அதிமுகவுடன் இருக்க வேண்டும்.  மத்தியில் பாராளுமன்றத்தில் மோடி அவர்கள் கொண்டு வருகிற அனைத்து மசோதாக்களை வெளிப்படையாக ஆதரிக்கும் கட்சியாக அதிமுக தன்னை அடையாள ப்படுத்திக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாக எதிரக்கிற கட்சியாக திமுக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறது. எனவே வரப்போகிற 2024 பொதுத் தேர்தல் என்பது ஒரே ஒரு கேள்வியை முன்வைத்துதான் நடைபெறும்.

அதாவது 2024 மூன்றாவது முறையாக மோடி பிரதமராக இருக்க வேண்டுமா? இல்லையா என்பதுதான் அந்தக் கேள்வி. அப்போது மோடி பிரதமராக இருக்கக்கூடாது என திமுக வேலை செய்யும், காங்கிரசும் அப்படித்தான் வேலை செய்யும். அதே நேரத்தில் அதிமுக மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்யும், எனவே அந்த தேர்தலில் நிச்சயம் பாஜக அதிமுக ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கும். இப்போது நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கூட்டணி இல்லாததனால் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று கூறமுடியாது, இந்த நேரத்தில் அதிமுக உளப்பூர்வமாக ஒரு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். திமுக கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டும் இல்லாமல் எப்போதும் கொள்கை கூட்டணியாக தொடர்கிறது. அதில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியான நிலைப்பாடுகளை எடுக்கின்றன.

அதேபோல அதிமுக பாஜக கூட்டணி என்பது  வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டுமில்லாமல், கொள்கை கூட்டணியாக இருக்க வேண்டும். எனவே அதிமுக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். பாஜகவுடன் பயணம் செய்யப் போகிறோமா இல்லையா? அப்படி பயணம் செய்தால் இந்த விஷயத்திற்காக நாம் எவற்றையெல்லாம் ஆதரிக்க வேண்டும்? காமன் மினிமம் ப்ரோக்ராம்ஸ் வைத்து செயல்பட வேண்டும். ஸ்டாலின் இன்று புத்தகம் வெளியிடுகிறார். அதில் கூட அவர்களுக்கு யாரெல்லாம் கூட்டணி என்று அவர்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கிறார்கள். கட்சி நிகழ்ச்சிகளை கூட அரசியல் ரீதியாகவே அணுகுகிறார்கள். அதுபோன்ற நிலையை அதிமுகவும் பாஜகவும் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!