வேலுமணி பருப்பு வேகல.. ஜெயக்குமாருக்கு போலீஸ் முத்தமா கொடுக்கும்.. டார் டாரா கிழித்த தங்க தமிழ்ச் செல்வன்.

Published : Feb 28, 2022, 04:59 PM IST
வேலுமணி பருப்பு வேகல.. ஜெயக்குமாருக்கு போலீஸ் முத்தமா கொடுக்கும்.. டார் டாரா கிழித்த தங்க தமிழ்ச் செல்வன்.

சுருக்கம்

பொது இடத்தில் வைத்து ஒரு நபரை அடித்து அவமானப் படுத்தி இருக்கிறார், அப்படிப்பட்டவரை போலீசார் கைது செய்யாமல் முத்தம் கொடுப்பார்களா?  நாங்கள் இப்படித்தான் அடிப்போம், நீங்கள் முடிந்ததை பாருங்கள் என்று ஜெயக்குமாரை வீரவசனம் பேச சொல்லுங்கள் பார்க்கலாம், உண்மையிலேயே ஒரு தவறு நடந்திருந்தால் கள்ள ஓட்டு போட வந்த நபராக இருந்தாலும் அவரைப் பிடித்து காவல் துறையிடம்தான் ஒப்படைக்க வேண்டும், ஆனால் ஜெயக்குமார்அந்த நபரை பிடித்து அடித்து கொடுத்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொது இடத்தில் ரவுடித்தனம் செய்தால் போலீஸ் அவருக்கு முத்தம் கொடுக்குமா என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கேள்வியெழுப்பியுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், கடந்த ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை இறைத்து பார்த்தும் கொங்குவில் வேலுமணி பருப்பு வேகவில்லை என்றும் தங்கதமிழ்ச் செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுக திமுகவிடம் மண்ணைக் கவ்வி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை கூட அக்காட்சி கைப்பற்றவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தோல்வி என்பது அதிமுகவின் வாடிக்கையாகிவிட்டது, நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் சரி, நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில்சரி அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல், கிராமபுற  ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக. ஆனல் அதிலும் தோல்வியை சந்தித்ததால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி என அதிமுகவினர் பேசத்தொடங்கினார். இது ஒரு கட்டத்தில் அதிமுக பாஜக இடையே பிளவை ஏற்படுத்தியது. பாஜக உடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சத்தில் அக்கட்சி தலைவர்கள் பாஜக  கூட்டணியை முறித்தும் கொண்டனர். 

எனவே இரு கட்சிகளும் தேர்தலை தனித்தனியாகவே சந்தித்தன. ஆனால் முன்பைவிட அதிமுகவின் தோல்வி மிக மோசமானதாக மாறிவிட்டது. கொஞ்ச நஞ்ச வாக்கு சதவீதம் கூட அதல பாதாளத்திற்கு விழுந்துவிட்டது. 30 முதல் 35 சதவீத வாக்குகளை வைத்திருந்த அதிமுக 20 சதவீத நிலைமைக்குத் தள்ளப்பட்டது. மொத்தத்தில் வரலாறு காணாத அளவுக்கு அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கொங்கு மண்டலத்திலும், அதிமுக கோட்டை விட்டுள்ளது.  அதேபோல் இதுநாள் வரை  அதிமுகவின் மீது சவாரி செய்து வந்த பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது பாஜக. இதுதான் அதிமுக தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவின்  படுதோல்வி குறித்து பலரும் பல வகைகளில் கருத்து கூறி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன், முதலில் அதிமுக தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் கொள்ளையடித்த கோடிகணக்கான பணத்தை எஸ்.பி வேலுமணி வைத்திருப்பதாகவும், அதை அவர் கொங்கு மண்டலத்தில் வாரி இறைத்தும் பருப்பு வேகவில்லை என்றும் தங்கதமிழ்செல்வன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் விவரம் பின்வருமாறு :- 21 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உட்பட தமிழகம் முழுவதும் 90 சதவீத வெற்றியை திமுக பெற்றுள்ளது. திமுக தலைவர், முதல்வர் மு.க ஸ்டாலினின் கடுமையான உழைப்புதான் இதற்கு காரணம். தனது தோல்வியை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிச்சாமி அதை மூடி மறைப்பதற்கு எதைஎதையோ கூறிவருகிறார். அதிமுக தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும், கடந்த ஒன்பது மாத ஆட்சி காலத்தில் மக்களுக்கு வேண்டிய திட்டங்களை குறைகளைத் தீர்த்து வைத்தது மக்களை நேரடியாக அவர் சென்று சந்தித்தது தான் இந்த வெற்றிக்கு காரணம். ஸ்டாலினின் செயல்பாட்டால் கவரப்பட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள், இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓட்டு போட வந்த ஒரு நபரை பிடித்து அடித்து வன்முறை செய்து, அவரை அரை நிர்வாணப்படுத்தி, அவமானப் படுத்தியிருக்கிறார். அதனால்தான் அவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் ஜெயக்குமாரின் கைதை அதிமுகவினர் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

பொது இடத்தில் வைத்து ஒரு நபரை அடித்து அவமானப் படுத்தி இருக்கிறார், அப்படிப்பட்டவரை போலீசார் கைது செய்யாமல் முத்தம் கொடுப்பார்களா?  நாங்கள் இப்படித்தான் அடிப்போம், நீங்கள் முடிந்ததை பாருங்கள் என்று ஜெயக்குமாரை வீரவசனம் பேச சொல்லுங்கள் பார்க்கலாம், உண்மையிலேயே ஒரு தவறு நடந்திருந்தால் கள்ள ஓட்டு போட வந்த நபராக இருந்தாலும் அவரைப் பிடித்து காவல் துறையிடம்தான் ஒப்படைக்க வேண்டும், ஆனால் ஜெயக்குமார்அந்த நபரை பிடித்து அடித்து கொடுத்திருக்கிறார். அந்த நபரை அடித்து சித்திரவதை செய்து அவர் கொலை முயற்சியில் ஈடுபட்ட பிறகு தான் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதேபோல் சதவீதம் குறைந்து விட்டது அதற்கு திமுக தான் காரணம் என்று கூறுகிறார்கள், ஆனால் 21 மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. முதல்வரின் நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்.  இதேபோல் கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் பருப்பு வேகவில்லை, கடந்த ஆட்சியில் கொள்ளையடித்த பணம் பல ஆயிரம் கோடி வேலுமணி இடம் உள்ளது.

பணத்தை வைத்து வேலுமணி  பந்தா செய்து பார்த்தார், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் கொடுத்து ஜெயிக்க வைத்தார் பரவாயில்லை, ஆனால் உள்ளாட்சி தேர்தலில் திமுக கடந்த எட்டு மாதம் மக்களுக்கு செய்த சேவைக்கு, மக்களுக்கு தடுப்பூசி போட்டதற்கு, வெள்ளம் வரும்போது மக்களை காப்பாற்றியதற்கு, தெருத் தெருவாக நடந்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பான  ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்காக  கோவை மக்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் இதில் வேலுமணியின் பந்தா பகட்டு எடுபடவில்லை. தோற்கபோகிறோம் என்பது தெரிந்துதான். வாக்குப்பதிவு அன்று அவர் அங்கு நாடகம நடத்தினார்.  திமுக ரவுடிகளை வைத்திருக்கிறது, அவர்கள்  வாக்குச்சாவடிகளை கைப்பற்றி விடுவார்கள் என நாடகம் நடத்தினார். ஆனால் அது எதுவுமே எடுபடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு