ரயில்வே சொத்தை சேதப்படுத்துபவர்களைக் கண்டால் சுட்டுத் தள்ளுங்கள் !! மத்திய அமைச்சர் ஆவேசம் !!

By Selvanayagam PFirst Published Dec 17, 2019, 9:34 PM IST
Highlights

போராட்டத்தின்போது ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுங்கள் என ரெயில்வே இணை  அமைச்சர்  சுரேஷ் அங்காடி  அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

குடியுரிமை திருத்தச் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வட மாநிலங்களிலும், டெல்லியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்களும், பொது மக்களும் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், போராட்டங்களின் போது ரெயில்களை சேதப்படுத்துபவர்களை சுட்டுத் தள்ளுங்கள் என ரெயில்வே இணை  அமைச்சர்  சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கூறுகையில், போராட்டங்களின் போது ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுங்கள் என மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

click me!