ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை...!! அதிரடி காட்டிய முதலமைச்சர்..!!

Published : Dec 17, 2019, 06:01 PM ISTUpdated : Dec 17, 2019, 06:03 PM IST
ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை...!! அதிரடி காட்டிய முதலமைச்சர்..!!

சுருக்கம்

சிஆர்பிஎஃப் படையினர்  கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து உத்திரபிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள்  மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது 

ஆட்சியே  கவிழ்ந்தாலும் சரி  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  திருத்தப்பட்ட குடியுரிமை  சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது .  டெல்லியில் உள்ள ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பின்னர் அது கலவரமாக வெடித்துள்ளது. இது நாடு முழுவதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்கள் மீது  டெல்லி போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து உத்திரபிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள்  மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .  இந்நிலையில் தமிழ்நாடு , கேரளா ,  மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள்  நடத்து வருகிறது.   கேரளா  முதலமைச்சர் பினராயி விஜயன் ,  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ,  பஞ்சாப் முதலமைச்சர் உள்ளிட்டோர்  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமுல்படுத்தப் போவதில்லை என கடுமையாக எதிர்த்து வருகின்றனர் . 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள. புதுவை முதலமைச்சர் நாராயணசாமி , குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது,  இந்தச் சட்டம்  மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ,  இது மக்களை பிரித்து இந்துத்துவா நாடக இந்தியாவை மாற்ற பாஜக முயற்சிக்கிறது .  ஆனால் அது பலிக்காது குடியுரிமை திருத்த சட்டத்தை எந்த காலத்திலும் புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் , எங்களுடைய ஆட்சியே கவிழ்ந்தாலும் சரி,  அதை பற்றி  கவலை இல்லை ,  மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் ,  அவர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!