குற்றசாட்டை ஸ்டாலின் நிரூபிக்கட்டும் !! பதவியை தூக்கி எறிஞ்சிட்டு போயிடுறேன் !! அதிரடியா சவால் விட்ட அமைச்சர் வேலுமணி !!

By Vishnu PriyaFirst Published Dec 17, 2019, 5:55 PM IST
Highlights

சென்னை மாநகராட்சியின் கட்டுமானப் பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்! என்பதை எனது விளக்கங்களின் மூலம் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். என் மீது அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், நான் எனது அனைத்து பதவிகளையும் துறந்துவிட்டு அரசியலை விட்டு விலக தயார். இல்லையென்றால் அதை ஸ்டாலின் செய்ய தயாரா?

*    நம் நாடு, மதத்தின் பெயரால், ஒரு காலத்தில் பிளவுப்படுத்தப்பட்டது. ஜனநாயகத்தில் பிளவுகள் இருப்பது மிகவும் அவசியம். குடியுரிமை சட்டத்தால், தாங்கள் பிளவுபடுத்தப்படுவதாக நினைப்பவர்கள் தாராளமாக வடகொரியா நாட்டுக்கு செல்லலாம். 
-    ததக்தா ராய் (மேகாலயா கவர்னர்)

*    குடியுரிமை மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இது வயிற்று வலியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், பல மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
-    அமித்ஷா (மத்திய உள்துறை அமைச்சர்)

*    பாலியல் வன்கொடுமைகளை திட்டமிட்டு நிகழ்த்துவோர், தண்டிக்கப்படாததால் மீண்டும் மீண்டும் இத்தகைய குற்றங்களை செய்கின்றனர். இது போன்ற குற்றங்களை செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படாவிட்டால், அடுத்த சில வாரங்களில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவர். பாலியல் குற்றங்களை தடுக்க ஆந்திராவில் நிறைவேற்றப்பட்டது போல தமிழ்நாட்டிலும் சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். 
-    ராமதாஸ் (பா.ம.க. தலைவர்)

*    இந்தியாவில் பொருளாதாரம் மீட்க முடியாத வீழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. மக்கள் கவனத்தை திசை திருப்புகிற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டாலும், நாட்டின் மொத்த பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் பலர் வேலை இழந்து உள்ளனர். 
-    வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)    

*    குடியுரிமை சட்டமானது மேற்கு வங்காளத்தில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். நாட்டிலேயே இந்த சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக மேற்கு வங்காளம் திகழும். இந்த சட்டத்தை மம்தாவால் நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது. 
-    திலீப் கோஷ் (மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர்)

*    கமல் குறித்த என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விமர்சிக்கவும்பட்டது. என் பேச்சு, வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகிறது. இது குறித்து நான் ஏற்கனவே விளக்கமளித்தேன். தற்போது கமலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். என் விளக்கத்தை ஏற்ற கமல், என்னை அன்புடன் நலம் விசாரித்து, வழியனுப்பினார். அவருக்கு என் நன்றி.
-    ராகவா லாரன்ஸ் (நடிகர்)

*    இருமுடி கட்டில் எடுத்து வரும் பன்னீர் பிளாஸ்டிக் பாட்டில்கள், சபரிமலை காடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது எடுத்து வரப்படும் பன்னீரில் ரசாயனம் கலந்துள்ளதால் அதை பூஜைக்கு பயன்படுத்துவதில்லை. எனவே அதை பக்தர்கள் மீது தெளித்து, பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதை அழிப்பது பெரிய சவாலாக உள்ளது. சுவாமிக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்து வாருங்கள். 
-    கண்டரரு மகேஷ் மோகனரரு (சபரி மலை தந்திரி)

*    சென்னை மாநகராட்சியின் கட்டுமானப் பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்! என்பதை எனது விளக்கங்களின் மூலம் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். என் மீது அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், நான் எனது அனைத்து பதவிகளையும் துறந்துவிட்டு அரசியலை விட்டு விலக தயார். இல்லையென்றால் அதை ஸ்டாலின் செய்ய தயாரா?
-    எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்சி துறை அமைச்சர்)

click me!