அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஷு , சாக்ஸ் …. செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 21, 2019, 8:04 PM IST
Highlights

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மதுரை மற்றும் தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று நடந்தது.

இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே திரும்பி பார்க்கும் சாதனைகளை தமிழகத்தில் செய்தவர் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவும்,  அவரது வழியில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும் தற்போது பல சாதனைகளை செய்து வருகிறார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் குடிமராமத்து பணிகளை முதல்வர் செயல்படுத்தி உள்ளார். நீரை சிக்கனமாக சேமிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது குடிமராமத்து பணிகளை செய்து வருகிறோம் என செங்கோட்டையன் தெரிவித்தார்..

20 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும்,

துறைக்கு துறை போட்டி போட்டிக் கொண்டு பல நலத்திட்டப் பணிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்க ஏதுவான, சாதகமான மாநிலமாக இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முதல்வரின் நடவடிக்கைதான் காரணம் என தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

click me!