சிஎம் கிட்ட கூட்டிட்டு போயி பேச வைக்காமல் இருந்திருந்தால் மெர்சல் படமே வெளியாகி இருக்காது...!! பிகில் விஜயை பிச்சி உதறும் அமைச்சர்...!!

By Asianet TamilFirst Published Sep 21, 2019, 6:49 PM IST
Highlights

மக்கள் யாரை ஆதரிக்க வேண்டுமா ஆதரிக்க கூடாது என்று விஜய் முடிவு செய்யக்கூடாது. அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார். 

முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசவில்லை என்றால் மெர்சல்படம் வெளிவந்திருக்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜி தெரிவித்துள்ளார்.அரசை கடுமையாக விஜய் விமர்சித்துள்ளது குறித்து அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசை ஏகத்திற்கும் சாடியிருந்தார். அவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் விஜயனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து கூறிவருகின்றனர். குறிப்பாக நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் விஜய் சரியான நேரத்தில் சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார் அவருக்கு எனது பாராட்டுக்கள் என விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் விஜய்யின் கருத்துக்கு எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் செய்தியாளர்களை பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விஜய் தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பரபரப்பாக பேசி வருகிறார்.

 

அவரின் பேச்சை பொருட்படுத்தத் தேவையில்லை, கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்ற அதிமுக ஆட்சி 2019ஆம் ஆண்டு தொடருமா என்று கேள்வி எழுந்த போது சுமார் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்து மக்கள் ஆட்சியை தொடர வைத்திருக்கிறார்கள். எனவே மக்கள் யாரை ஆதரிக்க வேண்டுமா ஆதரிக்க கூடாது என்று விஜய் முடிவு செய்யக்கூடாது. அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார். விஜயை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்று  பேசவைக்கா விட்டால்  இந்நேரத்திற்கு மெர்சல் படம்  வெளியாகியிருக்காது. அமைச்சர் விஜயை  நக்கல் அடித்தார்.  சமீபத்தில்  நடந்த பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “மக்கள் யார் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும்” என்றதுடன், பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில்   அரசை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!