ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தமிழக டாக்டரால் அதிர்ச்சி... உயிர் பயத்தில் உறைந்து போன நோயாளிகள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2020, 5:04 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் அந்த டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றது கண்டறியப்பட்டது. 
 

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லிஹி மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதியான தகவலை அடுத்து, அந்த மாநாட்டில் தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகவும் அவர்களுள் 500க்கும் மேற்பட்டோர் மட்டுமே கண்டறியப்பட்டதாகவும் மீதமுள்ளவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறும் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

அந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பங்குபெற்றவர்களுள் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று 124 பேருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் அந்த டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றது கண்டறியப்பட்டது. 

இதனை அடுத்து, இன்று காலை வரை மருத்துவ பணியில் இருந்த அந்த மருத்துவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அணுகியதோடு அவருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மருத்துவரின் வீடு, மருத்து அறை முதலானவற்றைச் சுற்றி 7 கி.மீக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இவரை சந்தித்த, இவருடன் பணியாற்றிய நபர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளனர். 

click me!