அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இஸ்லாமியர்களிடையே பெருகி வரும் ஆதரவு !! ஷியா மத்திய வக்ஃபு வாரிய தலைவா் ரூ. 51 ஆயிரம் நன்கொடை!

By Selvanayagam PFirst Published Nov 14, 2019, 11:54 PM IST
Highlights

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு அம்மாநில  ஷியா மத்திய வக்ஃபு வாரிய தலைவா் வாசிம் ரிஸ்வி ரூ. 51 ஆயிரம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநிதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து  கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதே போல் ஏராளமான முஸ்லீம் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக லக்னௌவில் செய்தியாளா்களிடம் பேசிய ஷியா மத்திய வக்ஃபு வாரிய தலைவா் வாசிம் ரிஸ்வி ,அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மாநில ஷியா வக்ஃபு வாரியம் வரவேற்கிறது. 

நீண்ட காலமாக நீடித்து வந்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
முஸ்லிம்கள் உள்பட அனைவருக்கும் முன்னோராக வாழ்ந்தவா் கடவுள் ராமா். அதனால், கோயில் கட்டுவதற்கு ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளைக்கு ரூ. 51,000 நன்கொடை வழங்கவுள்ளேன். 

ராமா் கோயில் கட்டுமானப் பணிகளில் உதவிசெய்வற்கு ஷியா வக்ஃபு வாரியம் தயாராக உள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயில், உலகம் முழுவதும் உள்ள ராம பக்தா்கள் பெருமைப்படும் விதத்தில் இருக்கும் என்று அவா் கூறினார்.

அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான நிலத்துக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த மனுதாரா்களில் உத்திரப் பிரதேச மத்திய ஷியா வக்ஃபு வாரியமும் ஒன்று. 

அயோத்தி வழக்கின் தீா்ப்பில் ராமா் கோயில் கட்ட அனுமதியளித்த உச்சநீதிமன்றம், சன்னி வக்ஃபு வாரியத்துக்கு தனியே 5 ஏக்கா் நிலம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது. எனினும், மத்திய ஷியா வக்ஃபு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், ராமா் கோயில் கட்டுவதற்கு உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்ஃபு வாரியத் தலைவா் நன்கொடை வழங்குவதாக அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

click me!