உள்ளாட்சித் தேர்தலில் அதிரடியாக களமிறங்கிய விஜயகாந்த் !! நாளை முதல் தேமுதிக விருப்ப மனு !!

By Selvanayagam PFirst Published Nov 14, 2019, 9:49 PM IST
Highlights

தமிழகத்தில்  டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் தேமுதிக விருப்பமனு பெறலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  அடுத்த மாத இறுதிக்குள்  நடைபெற உள்ளது. ஆனால்  இன்னும் தேர்தலுக்கான தேதி அறிவிக்கபடவில்லை.இருப்பினும் அனைத்து கட்சிகளும்  உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி விட்டன.   ஏற்கனவே திமுக , அதிமுக ஆகிய கட்சிகள்  விருப்ப மனுக்களை விநியோகம் செய்து வருகின்றன . 

இந்நிலையில்   தேசிய முற்போக்கு  திராவிட கழக   பொதுச்செயலாளர்   விஜயகாந்த் விருப்பமனுக்களை  பெற்று கொள்ளலாம் என அறிவித்து  உள்ளார்.

நாளை முதல்  உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் , கழக தொண்டர்களும் உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 15.11.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று  விஜயகாந்த் கூறி உள்ளார். 

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 25.11.2019 திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும்  விஜயகாந்த் கூறி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கும் தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் எனவும் அந்த அறிக்கையில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். 

click me!