பொங்கலுக்கு இலவசம்.. இதைவிட வேற அவமானம் இருக்கா? சீறிய சீமான்..!

By vinoth kumarFirst Published Dec 23, 2022, 2:37 PM IST
Highlights

வாரிசு அரசியல் தொடர்பாக மக்களிடம் தான் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வாரிசுகள் அதிகாரத்திற்கு மட்டும் தான் வருகிறார்கள். ஏன் ஆசிரியர் பணி, ராணுவ துறைக்கு செல்வதில்லை என கேள்வி எழுப்பினார். 

பொங்கலுக்கு அரசு இலவச அரிசி, சர்க்கரை வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன் என சீமான் கூறியுள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இதனை நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தில் கக்கன் உருவப்படத்துக்கு சீமான் மரியாதை செலுத்தினார். இதனையடுத்துது, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பொங்கலுக்கு அரசு இலவச அரிசி, சர்க்கரை வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன். விவசாயிகள் தான் விளைவிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முழம் கரும்பு கிடையாது. வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல்  அரசு விவசாயிகளின் பராம்பரிய பண்டிகைக்கு இலவசங்களை வழங்கி வருகிறது. 

வாரிசு அரசியல் தொடர்பாக மக்களிடம் தான் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வாரிசுகள் அதிகாரத்திற்கு மட்டும் தான் வருகிறார்கள். ஏன் ஆசிரியர் பணி, ராணுவ துறைக்கு செல்வதில்லை என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற தேர்தலை முன் கூட்டியே நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியான பிறகு வேறொரு நிலையாக மாறிவிட்டது. ஆன்லைன் மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசேதா என எதற்கும் அனுமதி அளிக்காத ஒரு ஆளுநர் அவசியமானவர்தானா? என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!