காவல் நிலையத்தில் பாலியல் வக்கிரம்.. பெண் டைப்பிஸ்டின் உதட்டை கடித்த காக்கி வெறிச் செயல்.. இது போலீசா? இல்ல???

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 11:04 AM IST
Highlights

இதை தடுக்க அரசும் காவல் துறையும் எத்தனையொ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இது போன்ற குற்றங்களை தடுக்க வேண்டிய காவல் நிலையத்திலேயே பாலியல் அத்துமீறல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலையத்தில் தட்டச்சு அமைச்சு பெண் பணியாளரின் உதட்டைக் கடித்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட காவல் நிலைய எழுத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலரின் இந்த அத்துமீறல் பொதுமக்கள் மற்றும் காவல் துறையின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆறு மாத குழந்தைகள் முதல் 60 வயது முதிர் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம் தொடர்கிறது. 

இதையும் படியுங்கள்: 16 ஆம் தேதி ஜெ சமாதியில் எடப்பாடியை அலறவிடப்போகும் சசி... பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.

இதை தடுக்க அரசும் காவல் துறையும் எத்தனையொ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இது போன்ற குற்றங்களை தடுக்க வேண்டிய காவல் நிலையத்திலேயே பாலியல் அத்துமீறல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் (ரைட்டர்) எழுத்தராக பணியாற்றி வருகிறார் வெங்கடேசன், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே காவல் நிலையத்தில் கணினி பிரிவில் பணியாற்றிவரும் அமைச்சு பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அந்த பெண்ணின் உதட்டை கடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:  டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 35.47 கோடி ரூபாய் அபராதம்.. தலை சுற்ற வைக்கும் தெற்கு ரயில்வே.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் வெங்கடேசன் எம்ஜிஆர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டதுடன், அந்தப் பெண் காவலரின் புகாரின்பேரில் காவல் நிலைய எழுத்தர் வெங்கடேஷிடம் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!